மன எழுச்சி என்னும் நோய் நம் மூளையில் உள்ள சில வேதிப்பொருட்களின் அளவுகள் மாறுபடும் பொழுது அல்லது அதிகமாகும் பொழுது (செரடோனின், டொபமைன் மற்றும் நார் அட்ரீனலின்) ஏற்படலாம்.
மன எழுச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பெரிய இராஜ குடும்பத்தில் பிறந்தவர்கள் என்று தங்களை உயர்த்தி கூறுவர். நோயாளிகள் எப்பொழுதும் மித மிஞ்சிய சந்தோஷத்துடனும், எந்நேரமும் ஆர்வத்தோடும் பரபரப்பாக ஏதாவது செயல்களை செய்து கொண்டே இருப்பர்.
1. எந்நேரமும் கலகலப்பாகவும், உற்சாகத்துடனும் காணப்படுவர்.
2. அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பர்.
3. சில நேரம் முகத்தில் கடுகடுப்பையும், எரிச்சலையும் கொண்டு மற்றவர்களை கோபமாக பேசுவர்.
4. தான் ஒரு பெரிய மகான் என்றும், தனக்கு பெரிய மனிதர்களை எல்லாம் தெரியும் என்றும் சொல்வர்.
5. வலியச் சென்று அடுத்தவர்களிடம் பேச்சு கொடுப்பர். இவர்களது பேச்சு இனிக்க இனிக்க நகைச்சுவை கொண்டதாக இருக்கும்.
6. விடியற்காலை 3 மணிக்கே எழுந்து ஏதாவது வேலைகளை செய்யத் தொடங்குவர்.
7. அடிக்கடி சாப்பிடுவதும் நண்பர்களை காண்பதும், சினிமாவிற்கு செல்வதுமாக இருப்பர்.
8. ஓய்வு இல்லாமல் எவ்வித களைப்புமின்றி தொடர்ந்து வேலைகளை செய்து கொண்டே இருப்பர். அவர்களின் செயலில் ஒரு அதீத வேகம் காணப்படும்.
9. சில நேரம் ஆடிப்பாடி, அரட்டை அடித்து பிறரை மகிழ்விப்பர்.
10. சில நேரம் ஆத்திரம் கொண்டு மற்றவர்களை தாக்குவர்.
11. நல்ல உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிவதில் நாட்டம் கொள்வர்.
12. சில நேரம் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வர்.
மன எழுச்சி நோயாளிகள் உறங்காமல் உணவு உண்ணாமல் அலைந்து திரிவதால் உடல்நலம் மிகவும் குன்றி காணப்படுவர். இவர்களை உடனடியாக மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
மருந்து மாத்திரைகளோடு தேவைப்பட்டால் மின் அதிர்வு சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயிலிருந்து முழுமையாக குணம் பெறலாம்.
Talk to one of Sana healthistic coaches to understand how we can help.