sanahealthistic

மன சுழற்சி (Obsessive Complusive Disorder)

மன சுழற்சி (Obsessive Complusive Disorder)

மனதை பாதிக்க வைக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்கள்:

மூளையில் உள்ள வேதிப்பொருளான செரடோனின் அளவு மாறுபடும் போது இந்நோய் வரலாம். நம்மில் சிலரின் மனதை பாதிக்க வைக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

திரும்பத் திரும்ப சில தேவையற்ற தவறான பயத்தையும், கவலையையும், தரக்கூடிய எண்ணங்கள் தொடர்ச்சியாக மனதில் எழுந்து ஒருவரின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். நோயாளி அம்மாதிரியான எண்ணங்களை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவரையும் மீறி இடைவிடாது சுழற்சியாக மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். இதுவே மனதை ஆட்டி வைக்கும் எண்ணங்கள் எனப்படும்.

  1. நோயாளிகள் தன் உடல் உபயோகிக்கும் பொருள் அசுத்தமடைந்து விடும் என்ற தேவையற்ற எண்ணம் கொள்ளுதல்.
  2. தான் செய்யும் ஒவ்வொரு செயலும் சரியல்ல, தவறு என்று சந்தேகம் கொள்ளுதல்.
  3. எந்தவொரு செயலை செய்தாலும் அதை முறையாக, உண்மையாக, நேர்த்தியாக செய்ய விருப்பம் கொள்ளுதல்.
  4. தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று தேவையற்ற அச்சம் கொள்ளுதல்.
  5. ஒரு சில தீய எண்ணங்கள், நமது கலாச்சாரத்திற்கு புறம்பான ஒவ்வாத எண்ணங்கள் தொடர்ச்சியாக மனதில் உருவெடுத்தல்.
  6. தன்னை வருத்திக்கொள்ள வேண்டும் அல்லது மற்றவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் திரும்பத் திரும்ப மனதிற்குள்ளாக வருதல்.
  7. தவறான பாலுறவு பற்றிய இழிவான காட்சிகள் கட்டுப்பாட்டைமீறி மனதில் தோன்றுதல்.

 

இம்மாதிரியான எண்ணங்கள் நோயாளிக்கு மனப்பதட்டத்தையும், அச்சத்தையும், மனக்கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடில்லாமல் அவர்களின் மன அமைதியையும், கவனத்தையும் பாதிக்கிறது தொடர்ந்து மருந்துகள் உட்கொள்வதனால் சிரொடோனின் அளவு சரிசெய்யப்பட்டு முழு நிவாரணம் பெறலாம்.

Not sure what kind of care you need?

Talk to one of Sana healthistic coaches to understand how we can help.