மன அழுத்தம் மிகவும் பரவலாக காணப்படுகிறது. மன அழுத்தத்தால், நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்படுகிறோம். மனச்சோர்வு என்பது மூளையில் உள்ள சில வேதிப்பொருட்களின் (நார் அட்ரினலின் மற்றும் சிரோடோனின்) குறைபாட்டால் ஏற்படுகிறது.
மனச்சோர்வு எதிர்க்கும் மருந்துகள்
சைக்கோ தெரப்பி
மருத்துவர் சொன்ன வழிமுறைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும். அவைகளை மெதுவாக செயல்புரிகின்றன. மருந்துகள் திறம்மபட செயல்பட 10 – 15 நாட்கள் ஆகின்றன.
மருத்துவர் சொன்ன அளவைவிட அதிகமாகவோ (அ) குறைவாகவோ (அ) தேவைப்படும் பொழுதோ எடுத்துக் கொள்ளக் கூடாது.
வேறு ஏதாவது நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
நீங்களாகவே மருந்துகளை நிறுத்தக் கூடாது.
நீங்களே உங்களை தனிமைப்படுத்தாதீர். எப்போதும் உங்களுக்கு பிடித்தமானவர்களுடனோ, நண்பர்களிடமோ, உங்களுக்கு அறிவுரை கூறும் மூத்தவர்களிடமோ தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சினைகளை கூறுங்கள். இது உங்களுக்கு மனதுக்கு அமைதியை கொடுக்கும்.
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்திற்கு நீங்கள் தான் காரணமென்று கூறாதீர்கள். நீங்கள் மட்டுமே காரணமல்ல.
இந்த சூழ்நிலைகளில் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் மன அழுத்தம் குறைந்து, லேசாவதுடன் ஆற்றல் கிடைக்கும். வேதிப்பொருட்களும் சமநிலை அடையும்.
சத்தான, ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மருந்துகளை சரியான முறையில் மருத்துவர் சொல்லியபடி சாப்பிடவும். மனநல ஆலோசனைக்கு தவறாமல் செல்ல வேண்டும். போதுமான அளவு தூக்கம் கண்டிப்பாக தேவை.
Talk to one of Sana healthistic coaches to understand how we can help.