sanahealthistic

மனச்சிதைவு நோய் / SCHIZOPHRENIA

மனச்சிதைவு நோய் / SCHIZOPHRENIA

மனச்சிதைவு நோய் பற்றிய முக்கிய தகவல்கள்

இந்நோய் மூளையில் உள்ள சில ரசாயன குறைபாடுகள் மற்றும் வேறுபாடுகளினால் வருகிறது.

மரபு வழியாக இந்நோய் வரலாம்.

ஆண், பெண் இருபாலரையும் இது சமமாகவே தாக்கும்.

இது தொற்று நோய் அல்ல.

மக்கள் தொகையில் நூறில் ஒருவர் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்படுவர்.

  1. தூக்கம் குறைவு.
  2. நடத்தையில் மாறுதல்.
  3. தனக்குள்ளே பேசிக் கொள்ளுதல் அல்லது சிரித்தல்
  4. மற்றவர்களுடன் பேசி பழகுவது குறைந்து, தனிமையை நாடுதல்.
  5. தெளிவில்லாத சிந்தனை, குழப்பமான பேச்சு.
  6. குளிப்பது, உடை மாற்றுவது, சாப்பிடுவது போன்ற செயல்கள் பாதிக்கப்படலாம்.
  7. படிக்கும் மாணவர்களோ அல்லது வேலைக்கு செல்பவர்களோ அதனை தொடரமுடியாத நிலை.
  8. தேவையற்ற சந்தேக உணர்ச்சி (பில்லி சூனியம், கொலை சதி. யாரோ பின் தொடர்தல் போன்ற உணர்வு).
  9. மேற்கூறிய சந்தேக உணர்வினால் உந்தப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சண்டை போடுதல்.
  10. இதே காரணங்களினால் வீட்டை விட்டு வெளியேறுதல்.
  1. மனநல மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
  2. மனச்சிதைவு நோயை குணப்படுத்த முடியும்.
  3. மருத்துவர் ஆலோசனைப்படி நீண்ட நாட்கள் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
  4. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், மருந்துகளை நிறுத்தாமல், எடுத்துக் கொண்டால் நிச்சயமாக குணப்படுத்த முடியும்.
  5. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் திருமணம் பற்றி முடிவு எடுக்க வேண்டாம்.

தவறான கருத்துக்கள்

உண்மைகள்

Not sure what kind of care you need?

Talk to one of Sana healthistic coaches to understand how we can help.