sanahealthistic

மறதிநோய் (Dementia)

மறதிநோய் (Dementia)

டிமென்ஷியா என்றால் என்ன?

டிமென்ஷியா/மறதிநோய் என்பது மூளை சம்பந்தப்பட்ட நோய்.

இது மூளையின் செயல்பாடுகளை குறைக்கும் பல்வேறு நோய்களை குறிக்க பயன்படுத்தும் ஒரு பரந்த சொல்.

டிமென்ஷியா பொதுவாக வயதானவர்களை பாதிக்கிறது. இது சாதாரண முதுமையின் அறிகுறிகள் அல்ல.

நிரந்தர குணமடைதல் இல்லை என்றாலும் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை அளித்தால் மறதிநோய் உள்ளவர்கள் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்தும்.

மறதி நோய் ஆரம்பத்தில் சிறிது சிறதாக ஆரம்பித்து நாளடைவில் அதிகரிக்கும். எவ்வளவு காலம் எடுக்கும் என்பது நபருக்கு நபர் வேறுபடும். ஆனால் மருத்துவர் இந்த வியாதியை உறுதி செய்தபின் சரியான உதவிகள் இருப்பின் ஒரு மனிதன் சுதந்திரமாக பல வருடங்கள் வாழ முடியும்.

  1. சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் உரையாடல்களை நினைவில் கொள்வதில் சிரமம்.
  2. குறையும் சிந்தனைத்திறன், ஞாபக மறதி.
  3. தன் உடமைகளை கண்காணிப்பதில் சிரமம். (கண்ணாடி, சாவி, நகை முதலியன.)
  4. அன்றாடம் பேசும் சொற்களை மறந்துவிடுவது.
  5. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுதல்.
  6. ஒருங்கிணைப்பதில், கவனம் செலுத்துவதில் சிரமம்.
  7. வாகனம் ஓட்டுவதில் சிரமம்.
  8. சிக்கலான பணிகளை முடிப்பதில் தடுமாற்றம்.
  9. மந்தநிலை, தேதிகளை மறப்பது.
  10. சிலருக்கு தூங்குவதில் சிரமம், பதட்டம் அல்லது பிரமைகள் ஏற்படலாம்.
  11. குளியலறையை பயன்படுத்துதல், தினச்செயல்பாடுகளுக்கு உதவி தேவைப்படும். சாப்பிடுவது போன்ற
  12. சில விதமான மறதிநோயில் சிலர் இல்லாதவற்றை இருப்பது என நினைப்பது. நிகழ்காலத்திற்கும், இறந்தகாலத்திற்கும் வித்தியாசமின்மை போன்றவையாகும்.
  • உடற்பயிற்சி-குறைந்தது 30 நிமிடங்கள். வாரத்தில் ஐந்து நாட்கள்
  • மருந்து வகைகளை முறைப்படி உபயோகித்தல்.
  • புகைப்பிடித்தலை நிறுத்துதல்.
  • மது அருந்துதல் – இதை கட்டுபாட்டிற்குள் அல்லது அடியுடன் நிறுத்துவது மிகவும் நன்று.
  • சத்தான உணவுகளை உட்கொள்ளல், அதிக இனிப்பு, உப்பு உணவுகளை தவிர்த்து எண்ணெய் தன்மை கூடிய மீன்வகைகள், பழவகைகள், மரக்கறிகளை சேர்த்துக்கொள்ளவும்.
  • உடல் இடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும்.
  • சமூக செயலிலும், மனதை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும்.
  • மேற்கூறியவற்றை கடைப்பிடிப்பீர்களேயானால் மறதி நோயை மட்டுமல்லாமல் புற்றுநோய், இதயநோய், பக்கவாதம் போன்றவற்றையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
  • மறதி நோய் வயது போன எல்லோரையும் பாதிக்கும் என்பதல்ல.
  • இது மூளை சம்பந்தப்பட்டது. இதில் வேறுபட்ட வகைகள் உண்டு.
  • இந்நோய் ஒருவரைப் பாதிப்பதற்கு அவர் பொறுப்பாளியல்ல. இது எவரையும் பாதிக்கலாம்.
  • மறதி நோய் உள்ளவர்கள் தனிப்பட்டவர்கள். அவர்களுக்கு என உணர்ச்சிகள், தனித்தன்மைகள், வாழ்நாள் அனுபவங்கள் உண்டு.
  • இவர்களால் சமுதாயத்தில் இயல்பான வாழ்க்கையை வாழமுடியும்.

Not sure what kind of care you need?

Talk to one of Sana healthistic coaches to understand how we can help.