உலக அளவில் தற்போது போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதார பிரச்சினையாக உள்ளது.
உலகம் முழுவதும் 2.30 கோடி மக்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
ஒருவர் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண குடி மற்றும் போதைப் பொருட்களை நாடுவது, அவருக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அந்த பொருட்களின் துணையுடனே அவர் தீர்வு காண முயற்சிக்கும் நிலை ஏற்படுகிறது.
இத்தகைய பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கு நாளடைவில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் பதட்டம், பயம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகிறது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, முடிவெடுப்பதில் சிக்கல், சிந்தனைத்திறன் குறைவு, ஞாபக மறதி, தனக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று கற்பனை செய்து கொண்டு அதன்படி நடந்து கொள்வது போன்ற மனநல பிரச்சினைகளும் ஏற்படலாம். மது உடலின் உள்ளே செல்லச் செல்ல அது உடலிலுள்ள வைட்டமின்களை அழித்துவிடுகிறது.
மேலும் கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது.
நம்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த கொடிய பழக்கத்தின் அடிமையாகின்றனர். ஆரம்பத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றும் போது நண்பர்களின் உந்துதலால் மது குடிக்க ஆரம்பிக்கின்றனர்.
நாளடைவில் மது அருந்துவதையே தினசரி பழக்கமாக்கி கொள்கின்றனர்.
சிறு வயதில் ஏற்படும் பலவிதமான ஏக்க உணர்வுகளும் ஏமாற்றங்களும் பிற்காலத்தில் குடிப்பழக்கத்திற்கு வழி வகுக்கலாம்.
சிலர் மனப்பதட்டத்தையும், கவலையையும் மறந்து வாழவும் மதுவை நாடுகின்றனர்.
மது ஒருபோதும் எந்த பிரச்சனையையும் தீர்த்ததில்லை! அதிகரிக்கவே செய்கிறது.
பணம், சமுதாயத்தில் மரியாதை, வீட்டில் நிம்மதி என்று பலவற்றை இழக்கும். இந்த நோயாளிகளுக்கு புற்றுநோய், மாரடைப்பு, மஞ்சள் காமாலை, அதிக இரத்த அழுத்தம், இரத்த வாந்தி, வயிற்றுப்புண் என்று பல நோய்களும் தாக்கலாம்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் பலர் தன்னால் எப்பொழுதுவேண்டுமானாலும் இப்பழக்கத்தை விட்டுவிட முடியும் என்று தவறாக நம்புவார்கள். மேலும் திடீர் என்று இந்த பழக்கத்தை கை விட்டால் உடலுக்கு நல்லதல்ல என்றும் எண்ணுவர், இவை இரண்டும் தவறான கருத்துக்கள்.
குடிப்பழக்கம் ஒரு கொடிய நோய். ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் அழிக்கும் வலிமையுடையது.
மனநல மருத்துவரின் ஆலோசனையுடன் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் போதை பழக்கத்தை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
வெளிநோயாளி பிரிவிலேயே நோயாளிக்கு சிகிச்சை அளித்து எளிதில் குணப்படுத்த முடியும்.
மீண்டும் நோயாளிகள் குடிக்கும் எண்ணம் கொள்ளாமல் செய்வது தான் இச்சிகிச்சையின் குறிக்கோளாகும்.
கடந்த 47 ஆண்டுகளாக போதைக்கு அடிமையான பல்லாயிரக் கணக்கான நோயாளிகளை வெளிப்புற நோயாளிகளாகவே சிகிச்சை செய்து குணப்படுத்துவது சனா மருத்துவமனையின் சிறப்பு அம்சமாகும்.
அதிகமாக மது உபயோகிப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் திடீரென்று குடியை நிறுத்தும் பொழுது உறக்கமின்மை, தலைவலி, பதட்டம், நடுக்கம், மாயத்தோற்றம் போன்ற தொந்தரவுகள் 0m (Delirium Tremens)
நச்சு நீக்கு மருத்துவத்தோடு நோயாளிக்கு மனக்கவலை, மனப்பதட்டம் போன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் குடிப்பவர்களுக்கு நடத்தை மாற்றும் மருத்துவம், அவரின் குடும்பத்தினருக்கு குடும்ப வழி சிகிச்சை முதலிய மருத்துவ ஆலோசனைகள் மூலம் குடிப்பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடலாம்!
Talk to one of Sana healthistic coaches to understand how we can help.