2. இவ்வறிகுறிகள் குறுகிய காலத்தில் ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விடும். இது சாதாரணமானவை.
3. இதே நிலை வாரக் கணக்கில், மாதக் கணக்கில் தொடர்ந்தால் உடலுக்கும், மனத்திற்கும் பாதிப்பு உண்டாகும். இதனை மனப் பதற்ற நோய் என்கிறோம்.
4. பொதுவாக மனப்பதற்றம் ஏற்பட்டால் கை, கால் நடுக்கம், பயம், வியர்த்து கொட்டுதல், தலை சுற்றுதல், இதயம் வேகமாக துடித்தல், மன அமைதியற்று பரப்பரப்பாக இருத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
5. மனப் பதற்ற நோய் அனைத்து வயதினருக்கும் ஏற்படலாம். உரிய சிகிச்சையின் மூலம் முழுமையாக தீர்வு காணலாம்.