sanahealthistic

மனநல பிரச்சனைகள் நோய் பற்றிய மூடநம்பிக்கைகள்

மனநல பிரச்சனைகள் நோய் பற்றிய மூடநம்பிக்கைகள்

உடலை பாதிக்கும் நோய்களில் தலைவலி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களும், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களும் உள்ளது போலவே மனதை பாதிக்கும் நோய்களும் பல வகைப்படும். மனநோய் இன, மத, மொழி சமூக கலாச்சார பொருளாதார பேதமின்றி எவரையும் பாதிக்கலாம்.

1. தெய்வங்களின் கோபமோ, பேய் பிசாசுகளின் ஆதிக்கமோ, மந்திரம், சூனியம் போன்ற மர்மமோ முற்பிறவியில் செய்த பாவமோ மன நோய்க்கு காரணமல்ல.

2. ஆண், பெண், ஏழை, பணம் படைத்தவர் என்றில்லாமல் மனநோய் பாரபட்சமின்றி எவருக்கும் ஏற்படலாம்.

3. அறியாமையின் காரணமாக மனநோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், மந்திரிக்க கொண்டு சென்று நோயின் தீவிரத்தை அதிகரிக்கின்றனர்.

4. மனநல மருத்துவரை நாடினால் மனநோயாளி என்று சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டு விடுமோ என்ற பயம் சிலரிடம் உண்டு. அது முற்றிலும் தவறான எண்ணமாகும்.

மனநல மருத்துவரின் ஆலோசனையின் மூலம் மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமாக வேலை திறனை அதிகரிக்கவும், திருமண உறவை மேம்படுத்தவும் மற்றவர் முன்னிலையில் தலைநிமிர்ந்து நடக்கவும் நோயாளிகளால் இயலும்.

5. நம் நாட்டில் பரவலாக “திருமணம் செய்து வைத்தால் மனநோய் குணமாகும்” என்ற ஒரு தவறான கருத்து மக்களிடையே காணப்படுகிறது. திருமணம் செய்து வைப்பதால் மனநோய் குணமாகாது. மாறாக பிரச்சனைகளும், குழப்பங்களும் தான் ஏற்படும். மனநோயாளிக்கு திருமணம் செய்வதற்கு முன்னர் மனநல மருத்துவரிடம் கண்டிப்பாக ஆலோசனை கேட்க வேண்டும்.

மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டவரை ஆரம்பகட்டத்திலேயே மனநல மருத்துவரிடம் அழைத்து செல்வதன் மூலம் இந்நோயிலிருந்து முற்றிலும் குணம் பெறலாம். நம் நாட்டிலேயே தற்போது மிகச்சிறந்த மருந்துகள் மிகவும் எளிதாக கிடைக்கின்றது. மனநோய் என்பது ஒரு பிரச்சனை அல்ல, இந்நோய் எளிதில் தீரக்கூடியது ஆகும்.

Not sure what kind of care you need?

Talk to one of Sana healthistic coaches to understand how we can help.